திரிவேணியும் காப்பியும்!
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் ஒன்றுசேரும் இடம்தான் "திரிவேணி சங்கமம்' என்று போற்றப்படுகிறது.


கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் ஒன்றுசேரும் இடம்தான் "திரிவேணி சங்கமம்' என்று போற்றப்படுகிறது. புகழ்பெற்ற அந்த முக்கூடலில் மூழ்கிக் குளிப்பதும், புனிதமான அந்நீரைப் பருகுவதும் சிறப்பான ஒன்றாக நம்மவரால் கருதப்படுகிறது.
"திராவிடக் கவிமணி முத்துஸ்வாமி' என்கிற தமிழ் விற்பனர் "காப்பி' பருகுவதில் மிகவும் விருப்பமுடையவர். அவரைப் பொருத்தவரை காப்பி புனிதமான திரிவேணி சங்கம தீர்த்தம். எப்படி என்கிறீர்களா? வெண்பா ஒன்றில் அப்புலவர் அதை அற்புதமாக விளக்குகின்றார்.
பால், டிக்காஷன், சர்க்கரையின் "முக்கூடல்'தானே காப்பி. வெண்மையான பால் கங்கை, கருமையான டிக்காஷன் யமுனை, கரைந்து போயிருக்கும் சர்க்கரை அந்தர்வாகினியாகக் கலக்கும் சரஸ்வதி.
பாலங்கு கங்கையா பண்பார் கஷாயமே
ஏறும் கரிய யமுனையா - சாலக்
கரைந்துறையும் சீனி சரஸ்வதியாம் காப்பி
தரந்தெரி முக்கூடல் தலம்!
-திருப்புகழ் மதிவண்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...