களிப்பில் கவனம் கூடாது

நல்ல அறிவாளர்கள், பின்னர் தமக்கு நரைவரும் என்பதை எண்ணியவர்கள்.
களிப்பில் கவனம் கூடாது
Published on
Updated on
1 min read

'நரைவரும்' என்றெண்ணி, நல்லறி வாளர்

குழவி யிடத்தே துறந்தார்,-புரைதீரா,

மன்னா இளமை மகிழ்ந்தாரே, கோலூன்றி,

இன்னாங்கு எழுந்திருப் பார்.

(பாடல் 11. அதிகாரம்: இளமை நிலையாமை)

நல்ல அறிவாளர்கள், பின்னர் தமக்கு நரைவரும் என்பதை எண்ணியவர்கள். அதனால் அவர்கள் இளம் பருவத்திலேயே உடலின் வளத்தைக் குறைக்கும் ஆசாபாசங்களை எல்லாம் துறந்துவிட்டார்கள். இளமை என்றும் குற்றங்களினின்றும் தீராதது; நிலையில்லாத தன்மையினையும் உடையது. அதனை உணராமல், அந்தப் பருவத்தின் களிப்பில் அதிகமாக ஈடுபட்டவர்களே, இப்போது கோல் ஊன்றி மிகவும் வருத்தத்துடன் எழுந்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com