இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

சிறுவன் அய்லான் மரணம்: இருவருக்கு 4 ஆண்டு சிறை

துருக்கியில் 3 வயதுச் சிறுவன் அய்லான் உள்ளிட்ட 5 பேர் உயிரிழப்புக்குக் காரணமான அகதிகள் படகு விபத்து தொடர்பாக, 2 பேருக்கு

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

துருக்கியில் 3 வயதுச் சிறுவன் அய்லான் உள்ளிட்ட 5 பேர் உயிரிழப்புக்குக் காரணமான அகதிகள் படகு விபத்து தொடர்பாக, 2 பேருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
 துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்று கொண்டிருந்த அகதிகள் படகு ஏஜியன் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது.
 இதில் அய்லான் குர்தி, அந்தச் சிறுவனின் சகோதரன், தாய் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
 துருக்கியின் பொத்ரும் நகரில் கரையொதுங்கிய அய்லானின் படம், ஊடகங்களில் வெளியாகி உலக அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
 இந்த நிலையில், அந்த விபத்து தொடர்பாக பொத்ரும் நகர நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், படகுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்ததற்காக முவாஃப்கா அலாபஷ் மற்றும் ஏùஸம் அல்ஃப்ராத் ஆகிய இருவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. ஆள் கடத்தல் வணிகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
 எனினும், அலட்சியம் காரணமாக மரணத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
 துருக்கியில் வழக்குகள் முடிவதற்கு வழக்கமாக நீண்ட காலம் பிடிக்கும் என்றாலும், தொடங்கிய ஒரு மாதத்துக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது அகதிகள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை துருக்கி தீவிரப்படுத்தியுள்ளதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.