தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் 1.3 லட்சம் வழக்குகளுக்கு தீா்வுநிரந்தரமாகிறது ஹைதராபாத் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்திமுக கூட்டணியில் இடதுசாரிகளுக்கு கூடுதல் இடம் இல்லை என்பது நியாயமல்ல: பெ. சண்முகம்29 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வணிக எரிவாயு சிலிண்டா் விநியோகம் தொடக்கம்: பெட்ரோலிய அமைச்சகம் தகவல்2047-க்குள் இந்தியாவில் 350 விமான நிலையங்களை உருவாக்குவதே இலக்கு மத்திய அமைச்சா் ராம்மோகன் நாயுடுபுதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

உலகின் பரபரப்பான விமான நிலையம்: துபை முதலிடம்

கடந்த 2017-ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் பரப்பரப்பான விமான நிலையங்கள் பட்டியலில் துபை விமான நிலையம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 7:25 pm

DIN

கடந்த 2017-ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் பரப்பரப்பான விமான நிலையங்கள் பட்டியலில் துபை விமான நிலையம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான 'வாம்' தெரிவித்துள்ளதாவது:
2017-ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் பரபரப்பாக காணப்பட்ட விமான நிலையங்களின் பட்டியலில் துபை முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக துபை இந்தப் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இந்த விமான நிலையம் 8.82 கோடி பயணிகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது.
அமெரிக்கா செல்லும் விமானங்களில் தாற்காலிகமாக மடிக்கணினி பயன்படுத்த தடைவிதிக்கப்பட்ட நிலையிலும், கடந்த 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 46 லட்சம் அதிகரித்துள்ளது என அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.