இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

என்னங்க ஜோக் அடிக்கிறீங்க.. அமெரிக்காவில் வெள்ளம் வருமா? இதோ புகைப்படங்கள்

அமெரிக்கா என்ன அமைந்தகரையா? கொஞ்சம் மழை பெய்ததும் வெள்ளக்காடாவதற்கு என்று கிண்டலடிப்பவர்களுக்கு ஒரு முக்கியச் செய்தி காத்திருக்கிறது.

News image
Updated On :9 ஜூலை 2019, 8:02 am

DIN


அமெரிக்கா என்ன அமைந்தகரையா? கொஞ்சம் மழை பெய்ததும் வெள்ளக்காடாவதற்கு என்று கிண்டலடிப்பவர்களுக்கு ஒரு முக்கியச் செய்தி காத்திருக்கிறது.

ஆம், அமெரிக்காவின் வாஷிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதுவும் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் ஏற்பட்ட கடும் வெள்ளம் வெள்ளை மாளிகையையும் விட்டு வைக்கவில்லையாம். வெள்ளை மாளிகையின் சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துவிட்டதால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

Story image

மழை மற்றும் வெள்ளம் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் கார்களையும் ஆங்காங்கே பார்க்க முடிகிறது.

Story image

திடீரென சாலைகளில் மழை நீர் சூழ்ந்து கொண்டதைப் பார்த்த பொதுமக்கள் வாகனங்களை விட்டுவிட்டு தப்பியோடினர்.

ஆமாங்க.. கன மழை எங்கு பெய்தாலும் வெள்ளம் ஏற்படும். அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, அமைந்தகரையாக இருந்தாலும் சரிதான்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.