இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

'விவசாயிகளின் போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் தலையிடாது'

தில்லியில் நடைபெறும் போராட்டக்களத்திலிருந்து விலகியிருக்க  எதிர்கட்சித் தலைவர்கள்  ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன. 

News image
விவசாயிகள் போராட்டம்(கோப்புப்படம்)
Updated On :8 டிசம்பர் 2020, 1:01 pm

DIN

தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திலிருந்து விலகியிருக்க எதிர்கட்சித் தலைவர்கள் ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் விவசாயிகள் 13 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தின் ஒருபகுதியாக இன்று நாடு முழுவதும் 'பாரத் பந்த்' கடைபிடிக்கப்படுகிறது. இதற்கு நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் விவசாயிகளின் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் விலகியிருக்கவும் முடிவு செய்துள்ளன. 

விவசாயிகள் ஆரம்பத்தில் இருந்தே எந்தவொரு கட்சியையும் போராட்டத்தில் அனுமதிக்கக் கூடாது என்ற முடிவுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தூண்டுதலினாலேயே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், அரசியல் ஆதாயங்களுக்காகவே விவசாயிகளின் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கின்றன போன்ற விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. எனினும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. 

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்  சீதாராம் யெச்சூரி, 'போராட்டத்தில் இருந்து விலகியிருக்க இடதுசாரிக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. ஏனெனில், விவசாயிகள் அரசியல் கட்சி சாராது தனித்து போராட்டம் நடத்தவே விரும்புவதாக எங்களிடம் தெரிவித்தனர். எனவே, இடதுசாரி கட்சிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் அனைத்துமே இந்த முடிவை எடுத்துள்ளன. 

இருப்பினும், எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஒற்றுமையுடன் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளனர். இதில் கட்சி சார்ந்து யாரும் கலந்துகொள்ளப்போவதில்லை. வெளியில் இருந்து நாங்கள் விவசாயிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார். 

அதேபோன்று, விவசாயிகளின் போராட்டம் முற்றிலும் அரசியல் சாராதது என்றும், போராட்டக்களங்களில் அரசியல் தலைவர்கள் யாரும் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் கூறிய சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, விவசாயிகளின் போராட்டத்தை அரசியல் செய்ய வேண்டாம் என்ற நோக்கில் இந்த முடிவினை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.