தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆஸ்திரேலியாவில் தொடரும் கரோனா அபாயம்: கண்காணிப்பு பணியில் ராணுவம்

சிட்னியில் டெல்டா வகை கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தெருக்களில் கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் வகையில் ராணுவம் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :2 ஆகஸ்ட் 2021, 5:48 am

DIN

சிட்னியில் டெல்டா வகை கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தெருக்களில் கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் வகையில் ராணுவம் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகிறது.

ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் டெல்டா வகை கரோனா தீவிரமாக பரவிவருகின்றது. இந்நிலையில், பிரிஸ்பேனில் ஊரடங்கு நீட்டிப்பட்டு சிட்னியில் உள்ள தெருக்களில் ராணுவம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகிறது. 

ஓராண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில், குயின்ஸ்லாந்தில் 13 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமான பிரிஸ்பேனில் அமல்படுத்தப்பட்டு ஊரடங்கு செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வரும் நிலையில், அது ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குயின்ஸ்லாந்து மாநில துணை முதல்வர் ஸ்டீவன் மைல்ஸ் கூறுகையில், "பரவலை கட்டுப்படுத்த முதற்கட்ட ஊரடங்கு போதவில்லை என்பது தெளிவாகியுள்ளது" என்றார். மற்ற வளர்ச்சி அடைந்த நாடுகளை காட்டிலும், ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாகவே உள்ளது.

இருப்பினும், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மற்ற நாடுகளை காட்டிலும் ஆஸ்திரேலியாவில் குறைவாகவே உள்ளது. ஆனால், பிரதமர் ஸ்காட் மோரிசன் பெருந்தொற்றை கையாண்ட விதம் பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

மளிகை பொருள்களை வாங்க உள்பட அவசியமான காரணங்களுக்கு மட்டுமே வீட்டிலிருந்து வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிட்னி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஐந்து வார காலமாக ஊடரங்கு அமலில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.