ஆப்கன் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா.
ஆப்கானிஸ்தான் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.


ஆப்கானிஸ்தான் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள் மற்ற நாடுகளுக்குச் சென்றுவிட துடித்து வருகின்றனர்.
பிறநாட்டு விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, ’’ஆப்கானிஸ்தானில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமைமீறல் கவலை அளிக்கிறது.
ஆப்கானிஸ்தான் மக்களை கைவிட முடியாது. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஐ.நா.வின் முழு ஆதரவு உண்டு.
அடுத்து வரும் நாள்கள் முக்கியமானதாக இருக்கும். ஆப்கானிஸ்தானில் நடப்பவைகளை உலகம் கண்காணித்துக்கொண்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்கள் நாடு கடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும்’’ என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...