அமெரிக்க அதிபர் டிரம்பின் சுட்டுரை கணக்கு முடக்கம்

விதிமுறைகளை மீறியதாக அமெரிக்க அதிரபர் டிரம்பின் சுட்டுரை கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் சுட்டுரை கணக்கு முடக்கம்


வாஷிங்டன்: விதிமுறைகளை மீறியதாக அமெரிக்க அதிரபர் டிரம்பின் சுட்டுரை கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே வனமுறை மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக,  டிரம்ப் தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்ட3 பதிவுகளை வெளியிட்டார். அதில், தயவு செய்து தொண்டர்கள் அமைதி காக்கவும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அவர்கள் உண்மையிலேயே நம் நாட்டின் பக்கம் தான் இருக்கிறார்கள். அமைதி காக்கவும் என பதிவிட்டிருந்தார். 

மற்றொரு பதிவில், துணை அதிபர் மைக் பென்ஸுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க "தைரியம்" இல்லை என்று பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், விதிமுறைகளை மீறியதாக, முதல் முறையாக அதிபர் டிரம்பின் 3 பதிவுகளை நீக்கி, சுட்டுரை கணக்கை 12 மணி நேரத்திற்கு முடக்கியுள்ளது சுட்டுரை நிறுவனம். 

மேலும் வன்முறை மற்றும் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால் டிரம்பின் சுட்டுரை கணக்கு நிரந்தரமாக நீக்கப்பட்டும் என எச்சரிக்கை விடுத்துள்ள சுட்டுரை நிறுவனம்,  டிரம்பின் 3 பதிவுகளையும் நீக்கியுள்ளது. தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் உரையாற்றுவது போன்று வெளியான விடியோ ஒன்றையும் நீக்கியுள்ளது. 

இதேபோன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் உரையாற்றிய விடியோவை முகநூல் நிறுவனமும் நீக்கியுள்ளது. 

இதுகுறித்து முகநூல் நிறுவன ஒருமைப்பாடு துணை தலைவர் கை ரோசன் கூறியிருப்பதாவது: டிரம்ப் வெளியிட்டுள்ள விடியோவை நீக்கியுள்ளோம். அமெரிக்காவில் நடைபெற்று வரும் கலகங்களை மறைப்பதற்காக நீக்கவில்லை. நடைபெற்று வரும் வன்முறையை ஓரளவு கட்டுக்குள் கொண்வருவதற்கான சமநிலையை அது ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம் என்றும் இதுவொரு 'ஒரு அவசர நிலைமை' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விடியோ பதிவு தொடர்ச்சியான வன்முறைக்கு வழிவகுக்கும் என்பதால் நீக்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். 

இதேபோன்று டிரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கும் 24 மணிநேரத்திற்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com