சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

உலகளவில் கரோனா பாதிப்பு 17.37 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17.37 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 37.36 லட்சமாக அதிகரித்துள்ளது. 

News image
கரோனா தொற்று
Updated On :28 ஜனவரி 2024, 3:20 am

DIN


வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17.37 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 37.36 லட்சமாக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் தொற்று பாதிப்போர் மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது.  உலகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 17,37,17,565-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 37,36,092 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 15,65,86,510 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,33,94,963 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 87,594 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,42,04,374    கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 6,12,203-ஆக உயர்ந்துள்ளது. 

நோய்த்தொற்று பாதிப்புகளைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,88,08,372-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவால் 3,46,784 பேர் உயிரிழந்துள்ளனர். 

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,69,07,425-ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழப்புகளை பொறுத்தவரை, 4,72,629 பேர் உயிரிழப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.