சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

உலகளவில் கரோனா பாதிப்பு 16.64 கோடியைத் தாண்டியது: பலி 34.56 லட்சமாக அதிகரிப்பு

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16.64 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 34.57 லட்சமாக அதிகரித்துள்ளது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:17 pm

DIN

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16.64 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 34.57 லட்சமாக அதிகரித்துள்ளது. 

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மக்களை துன்பத்தில் ஆழ்த்தி வரும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் தொற்று பாதிப்போர் மற்றும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது.  உலகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 16,64,86,326-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 34,57,851 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 14,72,42,961 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,57,85,514 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 98,130 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,38,62,398   கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 6 லட்சத்து 3 ஆயிரத்து 408-ஆக உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,62,89,290-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவால் 2,95,525 பேர் உயிரிழந்துள்ளனர். 

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,59,76,156-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவால் 4,46,527 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.