உலகளவில் கரோனா பாதிப்பு 16.85 கோடியைத் தாண்டியது
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16.85 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 34.99 லட்சமாக அதிகரித்துள்ளது.


வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16.85 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 34.99 லட்சமாக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் தொற்று பாதிப்போர் மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை16,85,28,040-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 34,99,712 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 15,00,52,550 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,49,75,778 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 95,773 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,947,189 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 6 லட்சத்து 5 ஆயிரத்து 208-ஆக உயர்ந்துள்ளது.
நோய்த்தொற்று பாதிப்புகளைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,71,57,795-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவால் 3,.11,421 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,61,95,981-ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழப்புகளை பொறுத்தவரை, 4,52,224 பேர் உயிரிழப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...