பாராசூட் சாசக வீரர்களை ஏற்றி சென்ற எல் - 410 விமானம் மத்திய ரஷிய டாடர்ஸ்தான் பகுதியில் மோதியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த விமானத்தில், 21 பாராசூட் சாகச வீரர்கள் உள்பட 23 பேர் பயணம் செய்திருக்கின்றனர்.
உள்ளூர் நேரப்படி காலை 9:23 மணிக்கு மென்செலின்ஸ்க் நகரில் விமான விபத்துக்குள்ளானதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. விமானத்தில் பயணம் செய்த 23 பேரில் ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளனர் என அவசரகால அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
விபத்து குறித்து வெளியான புகைப்படங்களில் விமானம் இரண்டாக உடைந்திருப்பது போல தெரிகிறது. குறிப்பாக, விமானத்தின் முன் பகுதி முழுமையாக நொறுங்கி இருப்பதை காணலாம். இதுகுறித்து அவசர சேவை பிரிதிவிதி ஒருவர் கூறுகையில், "மீதமுள்ள 16 பேர் அங்கு விபத்தில் சிதிலம் அடைந்த பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டனர். ஆனால், அவர்கள் உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை" என்றார்.
அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஒருவரின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.