விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பிரான்ஸ்: பற்றி எரியும் காட்டுத் தீ, உதவிக்கரம் நீட்டும் ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பாவில் உள்ள நாடுகள் பலவும் பிரான்ஸில் பரவி வரும் காட்டுத் தீயினை அணைக்க அந்த நாட்டை நோக்கி அணிவகுக்கத் தொடங்கியுள்ளன. 

News image

கோப்புப் படம்

Updated On :12 ஆகஸ்ட் 2022, 4:17 pm

DIN

ஐரோப்பாவில் உள்ள நாடுகள் பலவும் பிரான்ஸில் பரவி வரும் காட்டுத் தீயினை அணைக்க அந்த நாட்டை நோக்கி அணிவகுக்கத் தொடங்கியுள்ளன.

ஐரோப்பாவின் பல நாடுகளிலும் அனல் அலை வீசுவதால் காட்டுத் தீ அதிக அளவில் பரவி வருகிறது. போர்ச்சுகலில் அதிக அளவில் பைன் காடுகள் உள்ளன. தொடர்ந்து கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீயினால் பைன் காடுகள் அதிக அளவில் எரிந்து நாசமாகி வருகின்றன.

பிரான்ஸ் நாட்டின் காட்டுத் தீ பரவல் மற்ற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் அதிக அளவில் உள்ளது.

பிரான்ஸ் நாட்டின்  தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயினை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். காற்றின் வேகம் குறைவாக உள்ளதால் தீயினை அணைப்பது சற்று எளிதாக இருந்தாலும், தொடர்ச்சியாக தீ பரவும் வேகம் குறையவில்லை.

இதுவரை காட்டுத் தீயினால் 74 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமாக காடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயினால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் அவர்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பத்திரமான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 

ஏற்கனவே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமானோர் காட்டுத் தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், 360க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஜெர்மனி, ரோமானியா, போலாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு வந்து காட்டுத் தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே போல கிரீஸ் நாட்டிலிருந்து தீயினை அணைக்கும் பணிக்காக விமானங்கள் பிரான்ஸ் நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன. ஸ்வீடன் சார்பிலும் இரண்டு தீயினை அணைக்கும் வாகங்கள் ஈடுபட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.