விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உலகளவில் கரோனா நிலவரம்: அறியவேண்டிய முக்கிய விவரங்கள்

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 31.10 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 5.51 லட்சத்தைத் தாண்டிவிட்டது.

News image

உலகளவில் கரோனா நிலவரம்: அறியவேண்டிய முக்கிய விவரங்கள்

Updated On :11 ஜனவரி 2022, 7:10 am

DIN

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 31.10 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 5.51 லட்சத்தைத் தாண்டிவிட்டது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தி வந்ததாலும் பல்வேறு நாடுகளிலும் தொற்று பாதிப்பு அதிகரித்தே வருகின்றன. 

கடந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற பல மடங்கு உருமாறிய கரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவத்தொடங்கி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 31,10,19,858-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 55,11,955 போ் உயிரிழந்துள்ளனர். 

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 26,05,57,401 போ் குணமடைந்துள்ளனர். சுமாா் 4,49,50,502 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 93,327 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 6,26,61,272 ஆகவும், பலி எண்ணிக்கை 8,61,336 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,58,69,947-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,83,936 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,25,58,695-ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,20,142 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.