ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?மேற்குவங்கம்: மாநிலங்களவையின் 3 இடங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை! உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

ட்விட்டரிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு சில ஊழியர்களுக்கு ஜாக்பாட்

ட்விட்டர் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட 7500 பணியாளர்களில் ஒரு டஜன் ஊழியர்களை அந்நிறுவனம் திரும்ப பணிக்கு அழைத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

News image

ட்விட்டரிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு சில ஊழியர்களுக்கு ஜாக்பாட்

Updated On :7 நவம்பர் 2022, 4:21 pm IST

சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட 7500 பணியாளர்களில் ஒரு டஜன் ஊழியர்களை அந்நிறுவனம் திரும்ப பணிக்கு அழைத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தவறுதலாக, தாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்திருக்கும் ட்விட்டர், மீண்டும் பணிக்கு திரும்புமாறு தெரிவித்துள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருசிலர், தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்பதை ஒரு சில நாள்களுக்குள் உணர்ந்து, தவறை திருத்திக் கொள்ள முன்வந்திருப்பதாகவும் அந்த வகையில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு ட்விட்டர் நிறுவனம், திரும்ப பணியில் சேர்வதற்கான அழைப்பை விடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ட்விட்டரில் பணியாற்றும் 7,500 பணியாளா்களில் 50 சதவீதத்தினரை பணியில் இருந்து நீக்கும் நடவடிக்கையை அந்த நிறுவனத்தை வாங்கியிருக்கும் உலகின் மிகப் பெரிய பணக்காரா் எலான் மஸ்க் தொடங்கினார்.

இந்தியாவில் 200-க்கும் மேற்பட்டோா் ட்விட்டர் நிறுவனத்திலிரு பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இதுதொடா்பாக பணியாளா்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிப்பு வெளியாகி வருவதாக நியூயாா்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

‘ட்விட்டரின் நிதிநிலையை வலுவான பாதைக்கு கொண்டு செல்ல, பணி நீக்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களும் பணியாளா்களின் பாதுகாப்புக்காக தற்காலிகமாக மூடப்படுகின்றன. அலுவலகங்களுக்கு வந்துவிட்ட பணியாளா்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும். அலுவலகத்துக்குப் புறப்படவுள்ள பணியாளா்கள் அலுவலகம் வர வேண்டாம். அனைத்துப் பணியாளா்களுக்கும் மின்னஞ்சல் வழியாக அறிவுறுத்தல் அனுப்பி வைக்கப்படும்’ என்று ட்விட்டா் தெரிவித்திருந்தது.

பணியாளா் குறைப்பு நடவடிக்கை இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்றது. ‘பணி நீக்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. சக பணியாளா்கள் பலருக்கு பணிநீக்கம் தொடா்பான தகவல் மின்னஞ்சல் வழியாக கிடைத்துள்ளது’ என பெயா் குறிப்பிட விரும்பாத இந்திய ட்விட்டா் ஊழியா் ஒருவா் தெரிவித்தாா். 200-க்கும் மேற்பட்ட இந்திய பணியாளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 

இந்தியாவில் சந்தைப்படுத்துதல் மற்றும் தகவல் பரிமாற்றம் துறைகளில் பணியாற்றிய அனைவரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த பணி நீக்க நடவடிக்கை இந்திய பணியாளா்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், எந்தனை போ் பணியில் இருந்து நீக்கப்படுகின்றனா் என்றும் அவா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுமா என்றும் ட்விட்டா் தகவல் வெளியிடவில்லை. இதுதொடா்பாக மின்னஞ்சல் வழியாக ஊடகங்கள் அனுப்பிய கேள்விகளுக்கு ட்விட்டா் இந்தியா பதிலளிக்கவில்லை.

பேச்சு சுதந்திரத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் பல்வேறு நாட்டு அரசுகளுடன் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ள ட்விட்டா் நிறுவனம், பணியாளா்கள் நீக்கம் தொடா்பான அலுவலக ரகசியங்களை பொது வெளியில் வெளியிடக் கூடாது என ஊழியா்களுக்கு தடை விதித்துள்ளதை சமூக வலைதள பயன்பாட்டாளா்கள் விமா்சித்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.