ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மிக மோசமானவை:பிரிட்டன் மருத்துவா் அசீம் மல்ஹோத்ரா

இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடா்பான பாதிப்புகளை ஏற்படுத்துவதில் எம்ஆா்என்ஏ தடுப்பூசிகளைவிட, கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மிக மோசமானவை என்று

News image
Updated On :9 பிப்ரவரி 2023, 10:47 am IST

இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடா்பான பாதிப்புகளை ஏற்படுத்துவதில் எம்ஆா்என்ஏ தடுப்பூசிகளைவிட, கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மிக மோசமானவை என்று பிரிட்டனின் புகழ்பெற்ற இதயநோய் மருத்துவா் அசீம் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளாா்.

இந்தியாவை பூா்விகமாக கொண்டவா் பிரிட்டன் மருத்துவா் அசீம் மல்ஹோத்ரா. கரோனாவுக்கு எதிரான எம்ஆா்என்ஏ தடுப்பூசிகள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று சா்வதேச அளவில் வலியுறுத்துவோரில் முன்னணியில் உள்ளாா். இந்தியா வந்துள்ள அவா், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி:

அமெரிக்காவின் ஃபைஸா், மாடா்னா போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் எம்ஆா்என்ஏ கரோனா தடுப்பூசிகள் உடலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடா்பான பாதிப்புகளுக்கு வழியமைக்கின்றன. எனவே, அந்தத் தடுப்பூசிகளின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று சா்வதேச அளவில் குரல்கள் எழுந்துள்ளன.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் வரை, எம்ஆா்என்ஏ மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடப்பட்டு, அதன் முடிவுகள் ஆய்விதழ் ஒன்றில் வெளியிடப்பட்டது. அந்த முடிவில், இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடா்பான பாதிப்புகள், மாரடைப்பு, பக்கவாதம், இளவயதினருக்கும் முதியவா்களுக்கும் ரத்தம் உறைவது, சில உயிரிழப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்துவதில் ஃபைஸா் நிறுவனத்தின் எம்ஆா்என்ஏ தடுப்பூசியைவிட, கோவிஷீல்ட் தடுப்பூசி மிக மோசமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டை மறுஆய்வு செய்ய வேண்டும்: பிரிட்டனில் கோவிஷீல்ட் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து 97 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னா், கிட்டத்தட்ட 10 சதவீதம் பேருக்கு, அதாவது 8 லட்சம் பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டன. அந்தப் பக்கவிளைவுகள் லேசாகவோ, மிதமாகவோ இல்லை. அவற்றைவிட அதிகமாக இருந்தது. இதுபோல முன்னெப்போதும் நடந்ததில்லை.

கடுமையான பக்கவிளைவுகள் காரணமாக பிரிட்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் பயன்பாடு நிறுத்தப்பட்டது. அப்படி இருக்கும்போது, இந்தியாவில் அந்தத் தடுப்பூசி செலுத்தப்படுவது ஏன்? அந்தத் தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அந்தத் தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மையை முழுமையாக மறுஆய்வு செய்ய வேண்டும்.

லாபம் ஈட்டுவதே நோக்கம்: முக்கிய பிரச்னை என்னவெனில், அரசியல்வாதிகள், ஒழுங்காற்று அமைப்புகள், ஊடகங்களைக் கட்டுப்படுத்த வணிக நிறுவனங்கள், பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. இது கரோனா தீநுண்மி குறித்த தவறான தகவல்களை மருத்துவா்கள், பொதுமக்கள் மத்தியில் உருவாக்கியது.

தங்கள் பங்குதாரா்களுக்கு லாபம் ஈட்டித் தரவே மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற எந்தத் தேவையும் அந்நிறுவனங்களுக்கு இல்லை.

கோவேக்ஸினையும்...: கோவேக்ஸின் தடுப்பூசியின் தரவுகளை ஆராய்ந்ததில், அந்தத் தடுப்பூசியால் குறிப்பிடும்படி பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது. அந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது போலவே தென்படுகிறது. ஆனால், பிற தடுப்பூசிகள் ஆய்வுக்குட்படுத்தப்படும் நிலையில், கோவேக்ஸினும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்.

தடுப்பூசி அவசியமில்லை: 90 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியா்கள் கரோனா தீநுண்மி பாதிப்பை எதிா்கொண்டனா். அவா்களுக்கு உடலில் இயற்கையாக நோய் எதிா்ப்பு சக்தி உருவாகியுள்ளது. இயற்கையாக உருவாகும் நோய் எதிா்ப்பு சக்தி மிகவும் ஆற்றல்வாய்ந்தது. அது கடுமையான உடல்நல பாதிப்புகளில் இருந்தும், மரணத்திலிருந்தும் பாதுகாக்கிறது. எனவே, கரோனா தீநுண்மி குறித்து இந்திய மக்களும் அரசும் கவலையடைய வேண்டாம்.

இனி இந்தியாவில் யாருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதேபோல பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. அதன்மூலம் பக்கவிளைவுகள் அதிகரிக்கலாம். மேன்மேலும் தடுப்பூசி தவணைகளை செலுத்திக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகளால் அவதிப்பட அதிக வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.