
ஜப்பானில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் இதுவரை 54 மாகாணங்களில் இந்தக் காய்ச்சல் பரவியுள்ளது.
டோக்கியோ, ஜப்பானில் 2022 அக்டோபரில் முதல் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டை விட வேகமாக பரவிவரும் இந்த காய்ச்சல் தற்போது பல்வேறு மாகாணங்களுக்கும் பரவியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி,
ஜப்பானில் 23 மாகாணங்களில் இருந்த பறவைக் காய்ச்சலானது பருவ காலநிலை மாற்றத்தால், தற்போது 54 மாகாணங்களுக்கு இந்த காய்ச்சல் பரவியுள்ளது. முன்னதாக 2020-2021-ம் ஆண்டுகளில் 52 மகாணாங்களில் பருவியிருந்த நிலையில், இந்தாண்டு இது மேலும் அதிகரித்துள்ளது.
ஃபுகுவோகாவில் உள்ள ஒரு ஈமு பண்ணையில் பறவைக் காய்ச்சல் பரவியதால் சுமார் 430 பறவைகள் அழிக்கப்பட்டன. இதற்கிடையில் சிபாவில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் காரணமாக சுமார் 10 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டன.
54 மாணங்களில், மொத்தம் இதுவரை 77.5 லட்சத்துக்கும் அதிகமான கோழிகளிடம் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், மற்ற கோழிகளுக்கு பரவாமல் இருக்க அவை கொல்லப்பட்டன.
பறவை காய்ச்சல் பரவிய பகுதிகளிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவு வரை கோழிகள் மற்றும் அதன் முட்டைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.