கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நூலிழையில் உயிர் தப்பிய மும்பை தொழிலதிபர்-மனைவி

மும்பையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர், தொழிலதிபர் விகாஸ் ஓபராய், அவரது மனைவி காயத்ரி ஆகியோர் இத்தாலியில் நேரிட்ட கார் விபத்தில் நூலிழையில் உயிர்தப்பினர்.

News image
கோப்புப் படம்
Updated On :4 அக்டோபர் 2023, 11:03 am

DIN


மும்பை: மும்பையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர், தொழிலதிபர் விகாஸ் ஓபராய், அவரது மனைவி காயத்ரி ஆகியோர் இத்தாலியில் நேரிட்ட கார் விபத்தில் நூலிழையில் உயிர்தப்பினர்.

தெற்கு சார்டினியா பகுதியில் நடந்த சாலை விபத்துகுறித்து விகாஸ் கூறுகையில், சாலையிலிருந்து எங்கள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எனினும் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறேன். மற்றொரு காரில் வந்த இரண்டு பேர் பலியாகினர் என்று தெரிவித்துள்ளார்.

நீல நிற லம்போகினியில் விகாஸ் ஓபராய் தனது மனைவியுடன் சென்று கொண்டிருக்கும்போது சிவப்பு ஃபெராரியில் வந்த தம்பதி, இவர்களது காரை முந்த முயன்றபோது நேரிட்ட விபத்தில், ஃபெராரியில் தீப்பற்றி அதிலிருந்த இருவரும் பலியாகினர்.

ஓபராய் மற்றும் அவரது மனைவி காயத்ரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த லம்போர்கினி விபத்தில் சிக்கி உருகுலைந்துள்ளது விடியோக்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.