மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!இன்னும் ரூ.2000 நோட்டு வைத்திருக்கிறீர்களா? என்ன செய்ய வேண்டும்?வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!தவெகவும் திமுகவும் ஏன் ஒரே அணியில் வரக்கூடாது? திருமாவளவன்விரைவில் புதிய ஐஆர்சிடிசி இணையதளம்! நச்சென்று நான்கு மாற்றங்கள்!
/

பூடானையும் ஆக்கிரமிக்கும் சீனா! இந்தியாவுக்கு சிக்கல்?

பூடான் கிராமங்களை சீன ராணுவம் ஆக்கிரமிப்பது பற்றி...

News image

கோப்புப்படம்

Updated On :18 டிசம்பர் 2024, 1:48 pm IST

பூடான் எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி 22 கிராமங்களில் சீன ராணுவம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளது செய்றகைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

பூட்டானின் மேற்குப் பகுதியான டோக்லாமில் கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 22 கிராமங்களை ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டியது மூலம் சீனா தனது எல்லையை வலுப்படுத்தியுள்ளது.

டோக்லாமில் கடந்த 2017ஆம் ஆண்டில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொண்டபோது, இந்திய ராணுவம் தலையிட்டு கட்டுமானப் பணிகளை நிறுத்தியது. சுமார் 73 நாள்கள் மோதலுக்கு பிறகு இரு நாட்டுப் படைகளும் திரும்பப் பெறப்பட்டன.

தற்போது பூடானின் டோக்லா எல்லைப் பகுதிகளில் இந்தியாவின் துணை ராணுவப் படையான சாஸ்திர சீமா பல் அந்நாட்டுப் படையுடன் இணைந்து பாதுகாத்து வருகின்றது.

ஆனால், டோக்லா பகுதிகளில் உள்ள 22 கிராமங்களை சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், 8 கிராமங்களை சீனப் படைகள் நிர்வகித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பிரதான நிலப்பரப்பை வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கும் சிலிகுரி பகுதி அருகேவுள்ள பூடான் எல்லையில் சீனா தனது ஆக்கிரமிப்பை வலுப்படுத்தியுள்ளது இந்தியாவுக்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.

இந்த ஆக்கிரமிப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் அஜித் தோவல்

கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ரோந்துப் பணி மற்றும் படை விலக்கல் தொடா்பாக 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த சிக்கலை முடிவுக்கு கொண்டுவர சீனா-இந்தியா இடையே கடந்த அக்டோபரில் முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. தொடர்ந்து, படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டு சுமூக உறவு நீடித்து வருகின்றது.

தொடர்ச்சியாக இருநாட்டு உறவை வலுப்படுத்தும் நோக்கில் சீனாவில் இன்று நடைபெறும் சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் பங்கேற்கும் நிலையில், பூடான் எல்லைப் பிரச்னை வெடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.