சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ஜப்பானுக்கு பிரதமர் மோடி கடிதம்! 

பயங்கர நிலநடுக்கத்தால் ஜப்பான் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய பிரதமர் மோடி ஜப்பான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஜப்பான் பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி

Published On :

ஜப்பானில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். 

அந்தக் கடிதத்தில், 'கடந்த ஜனவரி 1 ஆம் நாள் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அறிந்தபின் மிகுந்த வருத்தமடைகிறேன். ஜப்பானுடனான உறவை இந்தியா மிகவும் மதிக்கிறது.

ஜப்பானுக்கு முடிந்த உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்' என எழுதியிருக்கிறார். 

மேலும், 'ஜப்பானுக்கும் ஜப்பான் மக்களுக்கும் துணையாக நிற்கிறோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்' எனக் கூறியுள்ளார். 

7.5 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள் அனைத்தும் மோசமாக சேதமாகியிருப்பதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  

ஜப்பானின் வடக்கு பெனின்சுலா பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் மிகவும் சேதமடைந்திருப்பதால் அங்கு மீட்புப்பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

பிரபல சுற்றுலா தளமான அசைச்சி தெருவில் கடைகள், வீடுகள் உள்பட 200 கட்டிடங்கள் நெருப்புக்கு இரையாகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.