இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உலகின் மிக மோசமான குற்றவாளியைக் கட்டிப்பிடித்த மோடி: உக்ரைன் அதிபர் கருத்து!

உலகின் மிக மோசமான குற்றவாளியை மோடி கட்டிப்பிடித்ததாக உக்ரைன் அதிபர் கருத்து தெரிவித்துள்ளார்.

News image
வொலோதிமீா் ஸெலென்ஸ்கி / மோடியுடன் புதின்
Updated On :9 ஜூலை 2024, 6:35 am

DIN

உலகின் மிக மோசமான குற்றவாளியை மோடி கட்டிப்பிடித்தது ஏமாற்றமளிப்பதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்தியா - ரஷியா இடையேயான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷியா சென்றுள்ளார். ரஷிய அதிபர் புதினுடன் மோடி இன்று (ஜூலை 9) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்குப் பின் இதுகுறித்த முழு விவரம் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்த நிகழ்வு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, “உக்ரைனில் இன்று ரஷியாவின் ஏவுகணைத் தாக்குதல் காரணமாக 13 குழந்தைகள் உள்பட 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இளவயது புற்றுநோயாளிகள் இருக்கும் குழந்தைகளுக்கான மருத்துவமனையை குறிவைத்து ரஷிய ஏவுகணைத் தாக்கியுள்ளது. பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

இந்த நேரத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் ஒருவர் மாஸ்கோவில் உலகின் மிக மோசமான குற்றவாளியைக் கட்டிபிடித்தது மிகவும் ஏமாற்றமாகவும், அமைதியின் மீது விழுந்த அடியைப் போலவும் இருக்கின்றது” என்று புதினுடனான மோடியின் சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 14 அன்று இத்தாலியில் ஜி7 மாநாட்டில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை பிரதமா் நரேந்திர மோடி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.