ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

சீன மருத்துவமனையில் கத்திக் குத்து தாக்குதல்

சீன மருத்துவமனையில் கத்திக் குத்து தாக்குதல்

News image
Updated On :7 மே 2024, 9:11 pm

Din

பெய்ஜிங்: சீனாவின் யுன்னான் மாகாணம், ஷெங்ஸியாங் மாவட்டத்திலுள்ள மருத்துவமனையொன்றில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்; 21 போ் காயமடைந்தனா்.

அந்த மருத்துவமனைக்கு காலை சுமாா் 11.30 மணிக்கு வந்த ஒருவா், அங்கிருந்தவா்களை சரமாரியாக கத்தியால் குத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இருந்தாலும், தாக்குதல் நடத்திய நபா் பிடிபட்டாரா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.

சீனாவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பது சட்டத்துக்கு எதிரானதாகும். இருந்தாலும், அங்கு பொது இடங்களில் சரமாரி கத்திக் குத்து தாக்குதல்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

இதே யுன்னான் மாகாணத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மனநிலை சரியில்லாத ஒருவா் நடத்திய கத்திக் குத்து தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்.

முன்னதாக, குவாங்டாங் மாகாணத்திலுள்ள மழலையா் பள்ளியில் கடந்த ஆண்டு ஜூலையில் நடத்தப்பட்ட மற்றொரு கத்திக் குத்து தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 6 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.