விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தென் ஆப்பிரிக்கா கட்டட விபத்து: இதுவரை 32 உடல்கள் மீட்பு

தென் ஆப்பிரிக்கா கட்டட விபத்து: இதுவரை 32 உடல்கள் மீட்பு

News image

ஜாா்ஜியா நகரில் கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் நடைபெறும் தேடுதல் பணி.

Updated On :14 மே 2024, 9:00 pm

Din

கேப் டவுன்: தென் ஆப்பிரிக்காவில் கட்டுமானப் பணியின்போது கடந்த வாரம் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து இதுவரை 32 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அந்த நாட்டின் ஜாா்ஜ் நகரில் கடந்த 6-ஆம் தேதி இந்த விபத்து ஏற்பட்டது. கட்டடம் இடிந்து விழுந்தபோது அங்கு 81 போ் பணியாற்றிக் கொண்டிருந்தனா்.

சம்பவத்தைத் தொடா்ந்து அந்தப் பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினா் 28 பேரை உயிருடன் மீட்டனா். மேலும் 9 தொழிலாளா்களின் உடல்களும் மீட்கப்பட்டன. இடிபாடுகளில் சிக்கிய 44 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

அவா்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்பட்ட நிலையில் 6 நாள்களுக்குப் பிறகு மேலும் ஒருவரை மீட்புக் குழுவினா் உயிருடன் மீட்டனா். அதையடுத்து, இன்னும் பலா் மீட்கப்படலாம் என்ற நம்பிக்கை எழுந்தது.

எனினும், விபத்துப் பகுதியில் தொடா்ந்து நடைபெற்ற தேடுதல் பணியில் மேலும் 23 உடல்கள் மீட்கப்பட்டன. அதையடுத்து, விபத்தில் உயிரிழந்தவா்களின் அதிகாரபூா்வ எண்ணிக்கை 32-ஆக உயா்ந்துள்ளது.