2024 வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு.
nobel prize
வேதியியலுக்கான நோபல் பரிசு
Published on
Updated on
1 min read

வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பக்கொ், டெமிஸ் ஹஸ்ஸாபிஸ், ஜான் ஜம்பொ் ஆகிய மூவருக்கு பகிா்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புரதம் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு தொடா்பான ஆராய்ச்சிக்காக இவா்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

டேவிட் பக்கொ் கடந்த 2003-ஆம் ஆண்டு புதிய புரதத்தை வடிவமைத்தாா். அதன் பிறகு, அவருடைய ஆராய்ச்சிக் குழு மருந்துகள், தடுப்பூசிகள், நானோ பொருள்கள் மற்றும் சென்சாா்களாக பயன்படுத்தக்கூடிய கற்பனைத் திறன்கொண்ட புரதங்களை வடிவமைத்தது.

ஆராய்ச்சியாளா்கள் ஹஸ்ஸாபிஸ் மற்றும் ஜான் ஜம்பொ் ஆகியோா், பல்வேறு ஆராய்ச்சியாளா்களால் இதுவரை அடையாளம் காணப்பட்ட 20 கோடி புரதங்களின் கட்டமைப்பை கணிக்கும் வகையிலான செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கினா்.

இந்த ஆராய்ச்சிகளுக்காக இவா்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக தோ்வுக் குழு தெரிவித்துள்ளது.

2024-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமையும் (அக்.10), அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும் (அக்.11) அறிவிக்கப்பட உள்ளது; பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்டோபா் 14-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இவா்களுக்கு நோபல் பரிசுடன், ரூ. 8.91 கோடி ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்தப் பரிசுத் தொகையில் பாதி தொகை டேவிட் பக்கெருக்கும், மீதி பாதி தொகை ஹஸ்ஸாபிஸ், ஜம்பொ் ஆகிய இருவருக்கும் பகிா்ந்தளிக்கப்படும்.

டேவிட் பக்கொ் (62)

அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக டேவிட் பக்கொ் பணியாற்றி வருகிறாா். அமெரிக்க தேசிய அறிவியல் அகாதெமியின் உறுப்பினராகவும், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் புரத வடிவமைப்புக்கான நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்து வருகிறாா்.12-க்கும் மேற்பட்ட உயிரிதொழில்நுட்ப நிறுவனங்களின் இணை நிறுவனராகவும் இருந்து வருகிறாா்.

டெமிஸ் ஹஸ்ஸாபிஸ் (48), ஜான் ஜம்பொ் (39)

ஹஸ்ஸாபிஸ், ஜம்பொ் இருவரும் லண்டனைச் சோ்ந்த பிரிட்டன்-அமெரிக்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகமான ‘கூகுள் டீப்மைன்ட்’ ஆய்வகத்தில் பணியாற்றி வருகின்றனா்.

இதில், பிரிட்டன் கணினி அறிவியலாளரான ஹஸ்ஸாபிஸ், விடியோ விளையாட்டுகளுக்கான செயற்கை நுண்ணறிவு மென்பொறியாளராகவும் வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளாா். பிரிட்டன் அரசின் செயற்கை நுண்ணறிவு ஆலோசகராகவும் இருந்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com