தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 96.26 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 473 புள்ளிகளுடனும், நிஃப்டி 134 புள்ளிகளுடன் நிறைவு!!உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா! பெரும் நிதியிழப்பு ஏற்படும் சூழல்!

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா! -அதிபர் டிரம்ப் உத்தரவு

PTI

Published On :

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் அந்நாட்டின் புதிய அதிபராக 2-ஆவது முறையாக மீண்டும் பதவியேற்றுக்கொண்ட பின் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று உள்பட சர்வதேச அளவில் எழுந்த பல சுகாதாரப் பிரச்னைகள் உலக சுகாதார நிறுவனத்தால் சரியாகக் கையாளப்படவில்லை என்ற முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக சுகாதார நிறுவனம் சுதந்திரமாகச் செயல்படத் தவறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு 2024-25 ஆம் நிதியாண்டின் பட்ஜெட்டில் அமெரிக்காவின் நிதி பங்களிப்பாக 662 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது அந்த அமைப்பு பெறும் மொத்த வருவாயில் 19 சதவிகிதமாகும்.

இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறவிருக்கும் உத்தரவில் அந்நாட்டின் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதால், சர்வதேச அளவில் பல்வேறு நோய் தடுப்பு, சிகிச்சை மற்றும் சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.