அமெரிக்காவில் பிறந்த குழந்தை! பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி!

அமெரிக்க மருத்துவமனையில் பிறந்த குழந்தையைப் பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி!
பிறந்த குழந்தை
பிறந்த குழந்தை
Published on
Updated on
1 min read

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்த குழந்தையைப் பார்த்த அனைவரும் தங்களது கண்ணையே நம்ப முடியாமல் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

பிர்மிங்காமில் தென்கிழக்கே அமைந்துள்ள ஒரு சிறிய நகரில் வாழ்ந்து வரும் பமேலே மன், பிரசவத்தை நினைத்து அச்சம் கொண்டிருக்கலாம்.

ஆனால், அவர் பிரசவ அறையில் அறுவைசிகிச்சை செய்து குழந்தையை பெற்றெடுத்த போது, குழந்தையைப் பார்த்த மருத்துவர்களும் செவிலியர்களும்தான் அடக் கடவுளே என்று வாயைப் பிளந்தனர்.

இதனைக் கேட்ட தனக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டதாகவும், என்ன நடந்திருக்கும் என்று யோசித்ததாகவும், பிறகுதான் தனக்கு குழந்தையை காட்டியபோது தானும் அவர்கள் அடைந்த அதே அதிர்ச்சியை அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

காரணம், பிறந்த குழந்தையின் எடை 13 பவுண்டுகள் (6.80 கிலோ கிராம்) இருந்துள்ளது. ஆனால், புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் சராசரி எடை வெறும் 7 பவுண்டுகள்தான் (3.17 கிலோ கிராம்). இரண்டு மடங்கு அதிக எடையுடன் குழந்தை பிறந்ததால்தான் பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அவருக்கு சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாகவும் குழந்தையின் தலையில் இளச்சிவப்பு நிற ரிப்பன் வைத்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையின் புகைப்படம் உலகம் முழுவதும் பிரபலமாகியிருப்பதாகவும், இவர் பிறந்து மூன்று நாள்கள்தான் ஆகிறது. ஆனால் மிகவும் பிரபலமாகிவிட்டார் என்று செவிலியர்கள் கூறுகிறார்கள்.

பிறந்து ஆறு மாதம் ஆனக் குழந்தைகளுக்கான ஆடையை இவரது தாயார் அணிவித்து விடுவதாகவும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதால் ஒரு சில நாள்களில் வீடு திரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு, 1955ஆம் ஆண்டு இத்தாலியில் 22 பவுண்டு எடையுடன் பிறந்தகுழந்தைதான் அதிக உடல் எடையுடன் பிறந்த குழந்தை என்று உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அதன்பிறகு, 2019ஆம் ஆண்டு நியூ யார்க்கில் 15 பவுண்டு எடையுடன் ஒரு குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com