அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

டெஸ்லா சிஇஓ மாற்றம்! எலான் மறுப்பு!

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி மாற்றப்படுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் மறுப்பு

News image
எலான் மஸ்க்- கோப்புப் படம்
Updated On :1 மே 2025, 2:45 pm

DIN

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாற்றப்படுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்கை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்குவதற்காக, நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு முயற்சி செய்து வருவதாக செய்திகள் பரவின. ஆனால், இவ்வாறாக பரவிவரும் செய்திகள் உண்மையில்லை என்று நிறுவனத்தின் நிர்வாகக் குழுவும், எலான் மஸ்க்கும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, எலான் மஸ்க் கூறியதாவது, ``அமெரிக்க நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் துளியளவும் உண்மையில்லை. ஒரு தவறான செய்தியை வெளியிடுவதும், டெஸ்லாவின் இயக்குநர்கள் குழுவினரின் தெளிவான மறுப்புச் செய்தியைச் சேர்க்காமல் இருப்பதும் மிகவும் மோசமான நெறிமுறை மீறல்தான்’’ என்று தெரிவித்துள்ளார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், தற்போது அமெரிக்க அரசியலில் அதிகளவிலான ஈடுபாடு கொண்டிருப்பதால், அவரால் நிறுவனங்களின் நிர்வாகப் பணிகளில் சரிவர ஈடுபட முடியவில்லை.

அதனால், டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து எலானை நீக்கிவிட்டு, வேறொருவரை நியமிக்க டெஸ்லா இயக்குநர்கள் குழு முயல்வதாக செய்திகள் பரவி வந்தன.

ஆனால், இந்தச் செய்திகளை மறுத்த டெஸ்லா இயக்குநர்கள் குழு, எப்போதும் எலான் மஸ்க்தான் தலைமை நிர்வாக அதிகாரி என்று கூறி, மறுத்து விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.