தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

விண்வெளியில் இருந்தும் அமெரிக்காவைத் தாக்க முடியாத கோல்டன் டோம்! டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவின் அதிநவீன வான் பாதுகாப்பு திட்டமான கோல்டன் டோம் பற்றி...

கோல்டன் டோம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப். - AP

Updated On :

உலகின் எந்தப் பகுதியில் இருந்து அமெரிக்காவைத் தாக்கினாலும் இடைமறித்து அழிக்கக் கூடிய கோல்டன் டோம் குறித்த அறிவிப்பை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் ஏராளமான அதிநவீன வான் பாதுகாப்பு அம்சங்கள் அமெரிக்காவிடம் ஏற்கெனவே உள்ளன. இடைமறித்து நடுவானிலேயே தாக்கி அழிக்கும் தளவாடங்களும் இருக்கின்றன.

இந்த நிலையில், அதிநவீன உலகில் வான் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ’கோல்டன் டோம்’ என்ற வான் பாதுகாப்பு திட்டத்தை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தின் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், 175 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பின்படி, கிட்டத்திட்ட ரூ. 15 லட்சம் கோடி) செலவில் கோல்டன் டோம் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கான வடிவமைப்பு இறுதியாகிவிட்டதாகவும், தனது பதவிக் காலம் முடிவதற்கு முன்னதாக (2029-க்குள்) இந்த கோல்டன் டோம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

முற்றிலும் அமெரிக்காவிலேயே வடிவமைக்கப்படவுள்ள இந்த கோல்டன் டோம் திட்டத்தை விண்வெளித் துறையின் துணைத் தலைவர் மைக்கேல் கட்லெயின் மேற்பார்வையிடவுள்ளார்.

கோல்டன் டோம் கட்டிமுடிக்கப்பட்ட பிறகு உலகின் எந்த மூலையில் இருந்து அமெரிக்காவைத் தாக்கினாலும், ஏன் விண்வெளியில் இருந்து தாக்கினாலும் இடைமறித்து அழிக்கக்கூடிய வல்லமையை அமெரிக்கா பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

கோல்டன் டோம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப்.

கோல்டன் டோம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப். - AP

கோல்டன் டோம் சிறப்பம்சங்கள்

  • ஹமாஸ் படை தாக்குதல் நடத்தியபோது, இரும்பு டோமை பயன்படுத்தி இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொண்டது, அதனடிப்படையில் நவீன தொழில்நுட்ப அம்சங்கங்களுடன் கோல்டன் டோமை கட்டமைக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.

  • இரும்பு டோம் குறுகிய தொலைவில் இருந்து குறைவான வேகத்தில் ஏவப்படும் ஏவுகணைகளை அழிக்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து கோல்டன் டோம் முற்றிலும் வேறுபட்டதாக அமைக்கப்படவுள்ளது.

  • ரஷியா, சீனா போன்ற நாடுகள் வைத்திருக்கும் கண்டம்விட்டு கண்டம் பாயும் அதிநவீன பாலிஸ்டிக் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்படுகிறது.

  • அமெரிக்காவைக் குறிவைத்து ஏவப்படும் அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை துல்லியமாகக் கண்டறிந்து, நடுவானிலேயே அழிப்பதற்காக கோல்டன் டோமை பல செயற்கைக்கோளுடன் இணைக்க திட்டமிட்டுள்ளனர்.

  • இதன்மூலம், விண்வெளியில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தினாலும் அதனை இடைமறித்து, கோல்டன் டோம் தாக்கி அழிக்கும்.

  • அமெரிக்காவைவிட 400 மடங்கு நிலப்பரப்பில் சிறிய இஸ்ரேல், அதன் தட்டையான பாலை வனப்பகுதியை எளிதாக இரும்பு டோம் மூலம் தற்காத்து வருகின்றது.

  • அமெரிக்கா தனது நிலப்பரப்புக்கு ஏற்றவாறு கோல்டன் டோமை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.