ஓமனுடனான ஹோர்முஸ் நீரிணை ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும் என ஈரான் திங்கள்கிழமை (ஆக.17) நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டிய அமெரிக்கா அந்நாட்டின் மீது தாக்குதலைத் தொடர்ந்தது. இதனால், அமெரிக்கா - ஈரான் இடையே ஸ்விட்சர்லாந்தில் கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
இந்தப் போரில், ஈரானின் முக்கிய கட்டமைப்புகளின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகளின் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இதனால் இருபுறமும் தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்தன. ஆகையால், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழுவதுமாக மூடியது.
இதைத் தொடர்ந்து, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, பல்வேறு நாட்டின் தலைவர்கள் தங்களது மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) அன்று, ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்து ஈரான் - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதேவேளையில், ஹோர்முஸ் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பாக ஓமனுடனும் ஈரான் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
இரு நாடுகளுக்கும் இடையே செல்லும் ஹோர்முஸ் நீரிணையை கப்பல்கள் கடந்து செல்வதற்கான திட்டம் தொடர்பாக ஓமானுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. தற்போது இரு தரப்பினரும் சேர்ந்து ஒரு கூட்டறிக்கைக்கான விவரங்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே மேற்கொள்ளும் ஒப்பந்தத்தில் ஓமன் தலையிட்டால் அந்நாட்டின் மீது குண்டு வீசப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Iran expressed confidence on Monday (Aug. 17) that the Strait of Hormuz agreement with Oman would be finalized soon.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் மீதான கட்டுப்பாட்டை உறுதி செய்யும் ஈரான்! டிரம்ப்பின் பெருமிதங்களுக்கு பதிலடி!
நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க மாட்டோம்: ஈரான் உறுதி!
ஹோர்முஸ் நீரிணை ஒப்பந்தம் நாளைக்குள் கையெழுத்தாகும்: அமெரிக்கா நம்பிக்கை
ஹோர்முஸ் தொடர்பாக ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தை! அமெரிக்கா புறக்கணிப்பு!
விடியோக்கள்
TVK 100 நாள் ஆட்சி: சாதித்தாரா விஜய்? | TVK Vijay | CM Vijay |


