ஆப்கனில் பள்ளியில் ஏற்பட்ட வெடிவிபத்து: 7 பேர் பலி, 90-க்கும் மேற்பட்டோர் காயம்
கிழக்கு ஆப்கானிஸ்தானில் பள்ளியில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து...

ஆப்கானிஸ்தான். - கோப்புப்படம்.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் உள்ள பள்ளியில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் பலியானதோடு 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அந்நாட்டின் மாகாண கலாசாரம் மற்றும் தகவல் துறை இயக்குநர் சமி உல் ஹக் பயான் தெரிவித்துள்ளார்.
சுரங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட கவனக்குறைவால் இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் 15 பேர் வரை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்றவர்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இரும்புத் தாது, தாமிரம், ஈயம், துத்தநாகம், தங்கம், நிலக்கரி மற்றும் விலையுயர்ந்த கற்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் நிறைந்த ஆப்கானிஸ்தானில் சுரங்கத் தொழில் ஒரு முக்கியத் தொழிலாக உள்ளது.
ஆனால், சுரங்க நிறுவனங்களில் பாதுகாப்புத் தரங்கள் பெரும்பாலும் மோசமாக இருப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன.
Summary
An explosion at a school in the eastern Afghan province of Kunar Saturday killed seven people and wounded more than 90, the province's culture and information director said, adding that the blast appeared to have originated in a neighboring depot for explosives.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

