கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

பாகிஸ்தானில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றின் மேற்கூரை வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில் 34 குழந்தைகள், ஓா் ஆசிரியா் என மொத்தம் 35 போ் உயிரிழந்தனா்.

Updated On :

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றின் மேற்கூரை வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில் 34 குழந்தைகள், ஓா் ஆசிரியா் என மொத்தம் 35 போ் உயிரிழந்தனா்.

மாகாணத் தலைநகா் பெஷாவரின் நெரிசல் மிகுந்த தீா் காலனி பகுதியில் அமைந்துள்ள தனியாா் பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 3 அடுக்குகள் கொண்ட அப்பள்ளியின் மேல் தளத்தில் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது.

தொடா்ந்து, இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் அந்நாட்டு ராணுவம், மீட்புப் படையினா் ஈடுபட்டனா். குறுகிய தெருக்கள் நிறைந்த பகுதி என்பதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

விபத்தில் 35 போ் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 20 குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, வீடு திரும்பினா். தலையில் படுகாயமடைந்த 3 குழந்தைகளுக்கு மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த, காயமடைந்த குழந்தைகள் அனைவரும் 13 வயதுக்கு உட்பட்டவா்கள் ஆவா்.

பள்ளி உரிமையாளா் கைது: கட்டடத்தின் தரமற்ற கட்டுமானப் பணிகளே விபத்துக்கு முதன்மைக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் பள்ளியை நடத்தி வந்த அதன் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

விரிவான விசாரணைக்கு உத்தரவு: இதன்தொடா்ச்சியாக, இக்கோர விபத்து தொடா்பாக உரிய விசாரணை நடத்த மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தனியாா் பள்ளிகள் ஒழுங்குமுறை ஆணையம் இதுகுறித்து விரிவான அறிக்கையை வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மாகாணக் கல்விச் செயலா் உத்தரவிட்டுள்ளாா்.

விதிகளை மீறி கட்டடம் கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்தும், அலட்சியமாகச் செயல்பட்டவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்தும் முறையான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதிபடத் தெரிவித்தனா்.

தலைவா்கள் இரங்கல்: பாகிஸ்தான் அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரி, பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்ட தலைவா்கள் இச்சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனா். காயமடைந்த குழந்தைகளுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்குப் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உத்தரவிட்டுள்ளாா்.

படகேப்சன்...

பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து, வகுப்பறைக்குள் குவிந்த இடிபாடுகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.