ஈரானில் திருமணக் கொண்டாட்டத்தில் அமெரிக்கா தாக்குதல்! 4 பேர் பலி!

ஈரானில் திருமணக் கொண்டாட்டத்தில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது குறித்து...

US bombed a wedding party in Iran

ஈரானில் திருமணக் கொண்டாட்டத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்... - ஏபி

Published On :

ஈரானில் திருமணக் கொண்டாட்டத்தில், அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ள ஈரானின் ஹோர்மோசான் மாகாணத்தில் உள்ள சிரிக் நகரத்தில், புதன்கிழமை (செப். 2) அதிகாலை திருமணக் கொண்டாட்டம் நடைபெற்ற ஒரு வீட்டின் மீது அமெரிக்க படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில், 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்ட நிலையில், சுமார் 63 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஈரானின் குற்றச்சாட்டுகளை அமெரிக்க அரசு மறுத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஈரானில் உள்ள ராணுவக் கட்டமைப்புகளை மட்டுமே குறிவைத்து தாக்கியதாகவும், ஈரானிய படைகளைப் போல மக்கள் குடியிருப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாது எனவும் அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் கூறியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு, ஈரானின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவைக் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு ஈரானின் செம்பிறை இயக்கம் கடிதம் எழுதியுள்ளது.

முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை அருகே வணிகக் கப்பல்கள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்த முயன்றதாகக் குற்றஞ்சாட்டி ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

four people were killed in a missile attack carried out by the United States during a wedding celebration in Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.