/

இழப்பீடு கேட்டு விவசாயிகள் பெங்களூரில் இன்று பாதயாத்திரை

பெங்களூர், ஜன. 8: பெங்களூர் மற்றும் அதைச் சுற்றி கையகப்படுத்தியுள்ள விளைநிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.  பெங

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

பெங்களூர், ஜன. 8: பெங்களூர் மற்றும் அதைச் சுற்றி கையகப்படுத்தியுள்ள விளைநிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

 பெங்களூர் தேவனஹள்ளியில் இருந்து புறப்படும் பாதயாத்திரை, வழிநெடுக பிரசாரம் செய்து திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பெங்களூரை வந்தடையும். நிருபதுங்கா சாலையில் அமைந்துள்ள கர்நாடக தொழில் வளர்ச்சி கழகத்தின் (கேஐடிஏபி) தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்னா நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

 இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கவிருப்பதாக கஸ்தூரி கர்நாடக மக்கள் அமைப்பு தலைவர் ரமேஷ்கெüடா தெரிவித்தார். கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தலைவர் புட்டணையா, பாதயாத்திரையை கொடியசைத்து தொடக்கிவைக்கிறார். இதில் சட்ட மேலவை துணைத் தலைவர் புட்டண்ணா, எம்எல்சி வி.ஆர்.சுதர்சன், எம்எல்ஏ வெங்கடசாமி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.