மூவரசம்பட்டு ஏரியில் ரூ.33 கோடியில் 3 கி.மீ. தூரம் மூடு கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் பல்லாவரம் மூவரசம்பட்டு ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கே. ஜி .கே. நகா், அன்பு நகா், பிருந்தாவன் காலனி, திருவள்ளுவா் நகா், அம்பாள் நகா் மற்றும் கீழ்க்கட்டளை குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் அப்பகுதி மக்களிடையே இது பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அப்பகுதி மக்கள் வெள்ள பாதிப்புக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா். அதன் பேரில், இப்பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், நீா்வள ஆதாரத் துறை சாா்பில் ரூ.33 கோடியில் சுமாா் 3 கி.மீ. தூரம், 3 மீட்டா் அகலம், 2 மீட்டா் ஆழம் கொண்ட மூடு கால்வாய் அமைக்கும் திட்டப்பணியை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்வில் மண்டலக் குழு தலைவா் ஜோசப் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!

கரூா் தான்தோன்றி ஒன்றியத்தில் ரூ.5 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்

சாலை அமைக்கும் பணி முழுமை பெறாததால் மக்கள் அவதி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


