திருமாவளவனைக் கண்டித்து பாஜக சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற போது குஷ்புவை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
பெண்கள் குறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பாஜக சாôர்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதில் நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சிதம்பரத்துக்கு செவ்வாய்க்கிழமை காரில் பயணம் மேற்கொண்ட குஷ்புவை செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு அருகே மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன், மாமல்லபுரம் ஏ.எஸ்.பி. சுந்தரவதனம் ஆகியோர் தலைமையிலான போலீஸார் கிழக்குக் கடற்கரை சாலையில் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, குஷ்புவும், அவருடன் வந்த பாஜக நிர்வாகிகள் 10 பேரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்து, கேளம்பாக்கம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்: கெüதமி பங்கேற்பு: பெண்கள் குறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக மகளிர் அணி மற்றும் பட்டியலினத்தவர் அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான கௌதமி பேசினார்.
இதில், பாஜக கலை இலக்கிய அணி பிரிவுத் தலைவர் காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலரும் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை





