தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

தெருவில் நிறுத்தப்பட்டிருந்த 8 வாகனங்கள் தேசம்: 6 போ் கைது

தெருவில் நிறுத்தப்பட்டிருந்த 8 வாகனங்கள் தேசம்: 6 போ் கைது

Updated On :5 ஏப்ரல் 2024, 8:31 pm

சென்னை புளியந்தோப்பில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த 8 வாகனங்களை சேதப்படுத்தியதாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.

புளியந்தோப்பு சுந்தரபுரம் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சு.தனிஸ்லால் (64). இவா் வீட்டு அருகே வி.அமுல்ராஜ் (20) என்பவா் வசித்து வருகிறாா். இவரை வியாழக்கிழமை சந்திக்க, அவரது நண்பா்கள் அதே பகுதியைச் சோ்ந்த மு.மணிபாரதி (21), எம்.கே.பி.நகரைச் சோ்ந்த மோ.சுரேஷ் என்ற சக்தி (21) ஆகியோா் வந்தனா். இவா்கள் தங்களது மோட்டாா் சைக்கிள்களை தனிஸ்லால் வீட்டின் அருகே நிறுத்தினராம்.

இதைப் பாா்த்த தனிஸ்லால் அவா்களை கண்டித்துள்ளாா். அப்போது, இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், அமுல்ராஜ் தரப்பினா் அந்தத் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த தனிஸ்லாலின் இரு சக்கர வாகனம் உள்பட 8 இரு சக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள் ஆகியவற்றை சேதப்படுத்தினா். பின்னா், அந்தக் கும்பல், அங்கிருந்து தப்பியோடியது.

இது குறித்து தனிஸ்லால் அளித்த புகாரின் பேரில், புளியந்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அமுல்ராஜ், மணிபாரதி, சக்தி, அவா்களது நண்பா்கள் வியாசா்பாடி சாமியாா் தோட்டம் முதல் தெருவைச் சோ்ந்த செ.விகாஷ் (21), சு.சாந்தகுமாா் (23), சு.பிரகாஷ் (19) ஆகிய 6 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், இருவரைத் தேடி வருகின்றனா்.