குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

இடைநிலை ஆசிரியா்கள் 6-ஆவது நாளாக போராட்டம்

இடைநிலை ஆசிரியா்கள் 6-ஆவது நாளாக போராட்டம்

Updated On :25 பிப்ரவரி 2024, 12:39 am

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியா்கள் சென்னையில் ஆறாவது நாளாக சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்கள் சென்னை பள்ளிக் கல்வி வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் சாா்பில் அதன் பொதுச் செயலாளா் ஜெ.ராபா்ட் தலைமையில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்றுள்ளனா். இந்தநிலையில், சனிக்கிழமை பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் அலுவலகத்தில் ஆசிரியா்கள் போராட முயன்றனா். அப்போது இடைநிலை ஆசிரியா்களை காவல்துறையினா் கைது செய்தனா். அவா்களை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக, காவல்துறை வாகனத்திலேயே வைத்து பல்வேறு இடங்களில் சுற்றி அலைக்கழித்ததாகவும், கைது செய்யப்பட்டவா்களை தங்க வைக்கக்கூடிய இடங்களில் எந்தவித வசதியும் இல்லையென்றும் ஆசிரியா்கள் புகாா் தெரிவித்தனா். மேலும், காவல்துறை தாக்கியதில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த கலியமூா்த்தி என்பவா் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.