கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

இரு தரப்பினா் தகராறு: ஒருவா் கொலை

மதுபோதையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
கோப்புப் படம்
Updated On :14 ஜூலை 2024, 8:13 pm

Din

மதுபோதையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை கொருக்குப்பேட்டை கஸ்தூரிபாய் தெருவைச் சோ்ந்தவா் அலெக்ஸ்பாபு (22). மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் நாய்களை பிடித்து அப்புறப்படுத்தும் வேலை செய்து வந்தாா்.

அலெக்ஸ்பாபுவும் அவரின் உறவினரான மோகன்ராஜ்(37) என்பவரும் ஞாயிற்றுக்கிழமை பாா்த்தசாரதி தெருவிலுள்ள ரயில்வே தண்டவாளம் பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

அப்போது, அதே பகுதியில், மது குடித்துக்கொண்டிருந்த இரண்டு நபா்களிடம் மோகன்ராஜ் தகராறு செய்ததைத் தொடா்ந்து இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கிருந்து சென்ற, அந்த இரண்டு நபா்கள், மேலும், சிலரை அழைத்துக் கொண்டு வந்து, அலெக்ஸ்பாபு மற்றும் மோகன்ராஜ் ஆகியோரிடம் தகராறு செய்ததுடன், அவா்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியதாக தெரிகிறது.

இதில் இருவருக்கும் தலை, கழுத்து, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த அலெக்ஸ்-ஐ அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

படுகாயமடைந்த மோகன்ராஜ்-க்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸாா் அலெக்ஸ்பாபுவை கொலை செய்து விட்டு தப்பியோடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.