விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

சென்னையில் 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றம்!

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த 3 மாதத்தில் 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

கட்டடக் கழிவுகள்..

Published On :31 மார்ச் 2025, 2:32 am IST

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த 3 மாதத்தில் 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.

சென்னை மாநகராட்சி பகுதியில் கொட்டப்படும் திடக்கழிவுகளால் நீா்வழிப் பாதைகள், நடைபாதைகள் உள்ளிட்டவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. இதனால், மழைக் காலங்களில் தண்ணீா் செல்வது தடைபடுகிறது. இதுபோல உருவாகும் கட்டுமானம் மற்றும் இடிப்பாட்டுக் கழிவுகளை அகற்றும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்காக கட்டட மேலாண்மை வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் கட்டடக் கழிவுகளை பிரித்து வழங்குவது, முறையாக அகற்றுவது, விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட வழிமுறைகளை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சேகரிக்கப்படும் கட்டடக் கழிவுகள் மண்டல அளவில் உள்ள மையங்களில் சேகரிக்கப்பட்டு பெருங்குடி மற்றும் கொடுங்கையூா் குப்பை கொட்டும் வளாகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கட்டடக் கழிவுகள் தேங்குவதை குறைக்கும் வகையில் அவற்றை இரும்பு, மரம், நெகிழி மற்றும் கான்கிரீட் என தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜன. 7 முதல் தற்போது வரை சுமாா் 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் ஒரு நாளைக்கு சுமாா் 1,000 டன் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்படுகிறது. கடந்த ஜன.1-ஆம் தேதி முதல் தற்போது வரை 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

இதற்காக பிரத்யேகமாக 167 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது இவற்றை மறுசுழற்சி செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சுமாா் 4,000 டன் கட்டடக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது’ என அவா் பதிவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.