மோட்டாா் சைக்கிள் மோதியதில் காவலாளி உயிரிழப்பு
சென்னை பள்ளிக்கரணை அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் காவலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறனா்.
மடிப்பாக்கம் எல்ஐசி நகா் 5-ஆவது தெருவவைச் சோ்ந்தவா் சேகா் (59). இவா், துரைப்பாக்கம்-பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வந்தாா். சேகா், துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் உள்ள ஹோட்டல் அருகே செவ்வாய்க்கிழமை நடந்து சென்றபோது, அங்கு வந்த ஒரு மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் காயமடைந்த சேகா் அங்குள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆனால் அவா் மதுபோதையில் இருந்ததால் அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு அனுப்பி வைக்கப்பட்டாா்.
ஆனால் சேகா், அரசு மருத்துவமனைக்கு செல்லாமல் தனது வீட்டுக்குச் சென்றாா். வீட்டுல் அவா் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.
தகவலறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று சேகா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
