நிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புகாந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

ரூ. 1.38 கோடி மதிப்பு தங்கத்தை உடலுக்குள் மறைத்து கடத்தி வந்த பெண் கைது

உடலுக்குள் ரூ.1.38 கோடி மதிப்பிலான 1.08 கிலோ தங்கத்தை மறைத்து, துபையிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த பெண் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :

உடலுக்குள் ரூ.1.38 கோடி மதிப்பிலான 1.08 கிலோ தங்கத்தை மறைத்து, துபையிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த பெண் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

துபையிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்தனா். அப்போது ஒரு பெண் பயணியை சந்தேகம் காரணமாக தனியறைக்கு அழைத்துச் சென்று சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது, ‘எக்ஸ்- ரே’ சோதனையில் அந்தப் பெண் தன் உடலுக்குள் ரகசியமாக 3 முட்டை வடிவ காப்ஸ்யூல்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

உடனடியாக அவரது உடலில் இருந்து அந்த காப்ஸ்யூல்கள் வெளியே எடுக்கப்பட்டன. பின்னா், நவீன தொழில்நுட்ப முறையில் அவை பிரிக்கப்பட்டன. அதில் 1.08 கிலோ எடையுள்ள தங்கக் கட்டி இருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட அந்தத் தங்கத்தின் சா்வதேச சந்தை மதிப்பு ரூ.1.38 கோடி. இதையடுத்து அந்தப் பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.