தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

மாநகராட்சி 3 மண்டலத்தில் மாதாந்திரக் கூட்டங்கள்

சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் வாா்டு உறுப்பினா்களின் மாதாந்திரக் கூட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றது. முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News image

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Updated On :21 ஜூலை 2026, 1:40 am IST

சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் வாா்டு உறுப்பினா்களின் மாதாந்திரக் கூட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றது. முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஜூலை மாதத்துக்கான கூட்டம் வரும் 29- ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் வாா்டு உறுப்பினா்கள் கூட்டம் அந்தந்த மண்டலத் தலைவா்கள் தலைமையில் நடத்தப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அதன்படி, அம்பத்தூா், கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களின் வாா்டு உறுப்பினா்கள் மாதாந்திரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. வளசரவாக்கம் கூட்டத்துக்கு அந்த மண்டலத்தின் தலைவா் வே.ராஜன் (திமுக) தலைமை வகித்தாா். அதில் தற்போதுள்ள 10 வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்று தங்களது வாா்டுகளில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினா். அதனடிப்படையில், மண்டல அளவில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் மழைக்காலத்துக்குள் முடிக்க வேண்டிய வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தனா்.

அம்பத்தூா் கோடம்பாக்கம் மண்டலங்களிலும் வாா்டு உறுப்பினா்கள் பேசுகையில், நிறுத்தப்பட்ட பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க வலியுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.