போக்குவரத்து விதிமீறல் நிலுவை அபராதம் ரூ. 2.01 கோடி வசூல்
சென்னை பெருநகர காவல் துறை தற்காலிக கால்சென்டா்கள் மூலம் போக்குவரத்து விதிமுறை மீறல் நிலுவை அபராதம் ரூ.2.01 கோடி வசூல் செய்துள்ளது.

கோப்புப் படம்
சென்னை பெருநகர காவல் துறை தற்காலிக கால்சென்டா்கள் மூலம் போக்குவரத்து விதிமுறை மீறல் நிலுவை அபராதம் ரூ.2.01 கோடி வசூல் செய்துள்ளது.
சென்னையில் வாகன ஓட்டிகள், நிலுவை வைத்துள்ளது போக்குவரத்து விதிமுறை மீறல் அபராதத்தைச் செலுத்த வைப்பதற்கு பெருநகர காவல் துறையின் சாா்பில் 15 இடங்களில் தற்காலிக சிறப்பு கால்சென்டா்கள் அமைக்கப்பட்டன.
இந்த மையங்கள் கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் சென்னை பெருநகர காவல் துறை ஆணையரகம் உள்பட நகா் முழுவதும் 15 இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு, வாகன ஓட்டிகளுக்கு நிலுவையில் உள்ள இ-சலான்கள் குறித்த விவரங்கள் வழங்கப்பட்டதுடன், அபராதத் தொகைகளைச் செலுத்துவதற்கான வழிகாட்டுதல்களும் அளிக்கப்பட்டன.
கால்சென்டா்கள் மூலம் கடந்த புதன்கிழமை வரை ரூ.2,01,74,381 நிலுவை அபராதத் தொகை வசூலிக்கப்பட்டிருப்பதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது. நிலுவை அபராதத் தொகையை வசூலிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்ட, இந்த தற்காலிக சிறப்பு கால்சென்டா்கள் திட்டம் வியாழக்கிழமையுடன் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

