தனியார் தொழிற்சாலையில் ரத்த தான முகாம்

சாம்சங் தொழிற்சாலை மற்றும் பொது சுகாதாரத் துறை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் சாம்சங் தொழிற்சாலை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

சாம்சங் தொழிற்சாலை மற்றும் பொது சுகாதாரத் துறை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் சாம்சங் தொழிற்சாலை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
சுங்குவார்சத்திரம் பகுதியில் வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தி செய்யும் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. மாவட்ட பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர் செந்தில்குமார் அறிவுறுத்தலின்பேரில், ரத்த தான முகாம் சாம்சங் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது. சாம்சங் தொழிற்சாலையின் துணைப் பொது மேலாளர் சரவணன் முன்னிலையில் நடைபெற்ற முகாமில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர்கள் சோகன்ராஜ், காவியா ஆகியோர் தலைமையில் ரத்தம் சேகரிக்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது.
முகாமில் தொழிற்சாலையில் பணிபுரியும் 102 தொழிலாளர்கள் கலந்து கொண்டு ரத்தம் வழங்கினர். இதில் சாம்சங் தொழிற்சாலை மருத்துவர் சத்தீஷ்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com