தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரத்திலுள்ள கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியொட்டி, காமாட்சியம்மன் கோயில் சந்நிதி தெருவில் ஏலோல சிங்க விநாயகர் கோயிலில் ரூபாய் நோட்டில் அலங்கரிக்கப்பட்ட ஏலோல சிங்க விநாயகர்.

Published On :


காஞ்சிபுரத்திலுள்ள கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
சங்குபாணி விநாயகர்: காஞ்சி காமாட்சியம்மன் கோயில், உலகளந்த பெருமாள் கோயிலுக்கு இடையே தெற்கு பகுதியில் சங்கை கையில் ஏந்தியவாறு அருள்பாலிக்கும் சங்குபாணி விநாயகர் கோயிலில் உள்ள விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சங்குபாணி விநாயகரை வழிபட்டனர். 
ரூ. 8 லட்சத்தில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்
காமாட்சியம்மன் கோயில் சந்நிதி தெருவில் ஏலோல சிங்க விநாயகர் கோயில் உள்ளது. இங்கு, ரூ. 8 லட்சத்துக்கு புதிய ரூ. 1, 10, 20,50, 100, 200, 500,2000 நோட்டுகளை வைத்து ஏலோல சிங்க விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். 
விருட்ச விநாயகர் கோயிலில்
காஞ்சிபுரத்தை அடுத்த கூழமந்தல் ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகருக்கு காலை பலவிதமான நறுமண பொருள்களால் கலச அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில், திரளானபக்தர்கள் கலந்துகொண்டு, விநாயகரை வழிபட்டனர். 
அதுபோல், கச்சபேஸ்வரர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பஞ்ச சந்தி விநாயகருக்கு பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர். ஏகாம்பரநாதர், குமரகோட்டம், வழக்கறுத்தீஸ்வரர், முக்தீஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக-அலங்காரம் செய்யப்பட்டது. 
மேலும், பிள்ளையார்பாளையம், மடம் தெரு, ராஜவீதிகள், பூக்கடைச் சத்திரம், மாமல்லன் நகர், செவிலிமேடு, ஏகனாம்பேட்டை, அய்யம்பேட்டை, சின்னகாஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட பல்வேறு தனி இடங்களில் பெரிய விநாயகர் சிலைகளை வைத்து, காஞ்சிபுரம் பகுதி யினர் விநாயகர் சதுர்த்தி விழாவை விமரிசையுடன் கொண்டாடினர்.
செங்கல்பட்டில்...
செங்கல்பட்டு என்ஜிஜிஓ நகர், சித்தி விநாயகர் கோயில் அண்ணா நகர் எல்லையம்மன் கோயில் , ரத்தின விநாயகர் கோயில், சார் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சக்தி விநாயகர் கோயில், புதிய பேருந்து நிலையம் அருகே வரசித்தி விநாயகர் கோயில் , மணிக்கூண்டு சித்தி விநாயகர் கோயில், சின்னநத்தம் சுந்தர விநாயகர் கோயில், பழைய பேருந்து நிலையம் கோட்டைவாயிலில் உள்ள நீதிவிநாயகர் கோயில், பெரியநந்தம் வினைதீர்த்த விநாயகர் கோயில், அனுமந்தபுத்தேரி செல்வ கணபதி கோயில், வெற்றி விநாயகர் கோயில் புதுஏரி செல்வ விநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சிறப்பு அபிஷேக, அலங்காரம், சிறப்பு வழிபாடுகள் மற்றும் உற்சவர் வீதி உலா நடைபெற்றது. 
செங்கல்பட்டு நகரில் இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட இந்து மத அமைப்புகள் சார்பில், 15-க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதேபோல் திருப்போரூர், திருக்கழுகுன்றம், சிங்கபெருமாள்கோயில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் நிறுத்தப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. 
மாமல்லபுரம் பேருந்து நிலையம் பகுதி கங்கைகொண்டான் மண்டபம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக வாங்கிச் சென்றனர். 
மதுராந்தகத்தில்...
மதுராந்தகத்தை அடுத்த ராமாநுஜ யோக வனத்தில் நவகிரக விநாயகர் சந்நிதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, நவகிரக விநாயகருக்கு வேள்வி பூஜை, அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையொட்டி, ராமாநுஜ யோக வனத்துக்கு காலை 9 மணிக்கு வருகை தந்த சென்னை சீனிவாச நிகேதன பீடாதிபதி சீத்தாராம சுவாமி, தாராமாதாஜி ஆகியோருக்கு பாதபூஜை செய்யப்பட்டது. 
பின்னர் நவகிரக விநாயகருக்கு தீபாராதனையை பீடாதிபதி சீத்தாராம சுவாமி செய்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.