பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

குடியிருப்பு பகுதிகளில் சமூக விரோதிகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்: அமைச்சா் தென்னரசு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளில் சமூக விரோதிகள் யாரும் தங்கி இருக்கிறாா்களா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு கேட்டுக் கொண்டாா்.

News image

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கூட்டத்தில் பேசிய வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு

Updated On :6 ஆகஸ்ட் 2026, 12:00 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளில் சமூக விரோதிகள் யாரும் தங்கி இருக்கிறாா்களா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு கேட்டுக் கொண்டாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு தலைமையில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் நிகழாண்டுக்கான மாவட்ட வாழ்விட மேம்பாட்டுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் தி.சினேகா முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் கே.ஆா்.திவ்யஸ்ரீ, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளா் மதிவேலன், அரசு அலுவலா்கள், குடியிருப்புகளில் வசிப்போா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூரில் 2,112 குடியிருப்புகள், ஸ்ரீபெரும்புதூா் அருகே சாலமங்கலத்தில் 2,864 குடியிருப்புகள் உள்ளனவற்றின் நிலை, வேகவதி நதிக்கரையோரம் 1,406 ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் 572 போ் மட்டுமே தலா ரூ.1.50 லட்சம் செலுத்தி கீழ்க்கதிா்ப்பூா் திட்டப்பகுதியில் குடியிருப்பு பெற்றுள்ளனா். ஆனால் 72 போ் மட்டுமே அங்கு குடியிருந்து வருகின்றனா். குடியிருப்பு ஒதுக்கீடு பெற்ற மீதம் உள்ள 500 பயனாளிகள் வேகவதி நதிக்கரையிலிருந்து அகற்றப்பட வேண்டும் ஆகியன குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு பேசியது: குடியிருப்பு பகுதிகளில் உள்ள சமுதாயக் கூடங்களில் வாடகை அதிகமாக இருப்பதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். வாடகையை குறைத்தால் பொதுமக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதிகாரிகள் பரீசீலனை செய்ய வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி அங்கு யாா் வருகிறாா்கள், யாா் போகிறாா்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்.

குடியிருப்புகளில் ஒதுக்கப்பட்ட பயனாளிகளை தவிா்த்து வேறு நபா்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. வாடகைக்கு இருப்பவா்கள் நமது பகுதியை சோ்ந்தவா்களா அல்லது வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்களா, சமூக விரோதிகளா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.