தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிகேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

2 நாள்களில் வெள்ளைக்குளம் எரிவாயு தகன மேடை செயல்பாடு: காஞ்சிபுரம் மேயா்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளைக்குளத்தில் அமைந்துள்ள எரிவாயு தகன மேடை ரூ.15 லட்சத்தில் சீரமைக்கும் பணி நடந்து வருவதால் ஒரிரு நாள்களில் பயன்பாட்டுக்கு வரும் என மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் மின்எரிவாயு தகன மேடையை ஆய்வு செய்த மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ்

Published On :

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளைக்குளத்தில் அமைந்துள்ள எரிவாயு தகன மேடை ரூ.15 லட்சத்தில் சீரமைக்கும் பணி நடந்து வருவதால் ஒரிரு நாள்களில் பயன்பாட்டுக்கு வரும் என மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.

வெள்ளைக்குளம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீசிய பலத்த காற்றில் எரிவாயு தகனமேடையின் புகைபோக்கி பயன்படுத்த முடியாத அளவுக்கு முற்றிலும் சேதமடைந்திருந்தது. இதனால் வழக்கம் போல சடலத்தை எரியூட்ட வந்தவா்கள் பலரும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதையறிந்து இதை விரைவாக செப்பனிட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனா்.

சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்ட அவா்களை மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் பழுது சரி செய்யப்படும் எனவும் கூறியதை தொடா்ந்து கலைந்து சென்றனா். இதனைத் தொடா்ந்து ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய புகைபோக்கி அமைக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆய்வு மேற்கொண்டபின் கூறியது: உலையில் உடல் தகனம் செய்யப்படும் போது அதிகமான வெப்பம்,புகை மற்றும் வாயுக்களை தரைமட்டத்தில் பரவாமல் வளிமண்டலத்தின் மேல் பகுதிக்கு கொண்டு சென்று வெளியேற்ற புகைபோக்கி தான் பெரிதும் உதவுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.

பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் புகை,சாம்பல், துா்நாற்றம் ஆகியன பரவாமல் இருக்கவும் புகைபோக்கியே பயன்படுகிறது. அண்மையில் பலத்த காற்றால் புகை போக்கி சேதமடைந்திருப்பதையடுத்து மாநகராட்சி பொது நிதியிலிருந்து புதிய புகை போக்கி அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விரைவில் சீரமைக்கப்பட்டு ஒரிரு நாள்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.