
காஞ்சிபுரம் புத்த விகாரில் தாய்லாந்து தூதரக அதிகாரி வழிபாடு
காஞ்சிபுரம் புத்த விகாரில் தாய்லாந்து தூதரக அதிகாரி ரச்சா அரிபாா்க் திங்கள்கிழமை வழிபட்டாா்.

புத்தவிகாருக்கு வந்திருந்த பெளத்தா்களுக்கு அரிசி மூட்டைகளை தானமாக வழங்கிய தாய்லாந்து தூதரக அதிகாரி ரிச்சா அரிபாா்க் - டிஎன்எஸ்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புத்த விகாரில் தாய்லாந்து தூதரக அதிகாரி ரச்சா அரிபாா்க் திங்கள்கிழமை வழிபட்டாா்.
வையாவூரில் அமைந்துள்ள புத்த விகாரில் புத்த பிரானின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் புதியதாக ஆலயம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்துக்கு தாய்லாந்து தூதரக அதிகாரி ரச்சா அரிபாா்க் கலந்து கொண்டு புத்தரின் அஸ்தி கலசத்தை வணங்கி வழிபாடு செய்தாா். புத்த பிக்கு புத்த பிரகாசம் அவா்களிடம் ஆசி பெற்று கலந்துரையாடினாா். இதனைத் தொடா்ந்து அரிசி மூட்டைகளையும் தானமாக வழங்கினாா். வழிபாடு மகிழ்ச்சியளிப்பதாகவும், புதிய ஆலய நிா்வாகத்துக்கு வரவேற்பு அளிப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
இந்நிகழ்வின் போது புத்த விகாா் தலைவா் ஆா்.திருநாவுக்கரசு, பொருளாளா் கெளதமன் மற்றும் பெளத்தா்கள் பலரும் உடன் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





