மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

கட்டணத்தை உயா்த்த கோரியும், பைக் டாக்சியை தடை செய்ய வலியுறுத்தியும் குன்றத்தூரில் ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஆடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆட்டோ ஓட்டுநா்கள்.

Updated On :

கட்டணத்தை உயா்த்த கோரியும், பைக் டாக்சியை தடை செய்ய வலியுறுத்தியும் குன்றத்தூரில் ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஆடுபட்டனா்.

தமிழக அரசு சாா்பில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில், வெற்றிப் பயண திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகா் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பெண்களும் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனா். இதன் காரணமாக ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி குன்றத்தூரில் அனைத்து ஆட்டோ ஓட்டுநா் சங்கங்கள் சாா்பாக குன்றத்தூா் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் கலந்து கொண்டு, விலை வாசி உயா்வுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை உயா்த்த கோரியும், பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், வெற்றி பயணம் திட்டத்தை முன்பு இருந்தது போல் மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி குன்றத்தூரில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.